>தொடர் மழை: நிரம்பிய ஏரி!

Published On:

| By Balaji

தொடர் மழையின் காரணமாகத் தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியது.

மதுராந்தகம் ஏரி தனது முழு கொள்ளளவான 23 புள்ளி 2 அடி என்ற உயரத்தை எட்டியது. அடுத்து எந்த நேரமும் தண்ணீர் திறந்துவிடலாம் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். ஏரியிலிருந்து கிளியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 250 கன அடி என்ற அளவிலேயே இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. முன்னெச்சரிக்கையாக ஏரியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் கிராமத்தில் உள்ள ஏரி 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த சில ஆண்டுகளாக வறண்ட நிலையில் காணப்பட்டது. தற்போது பெய்துவரும் மழையினால் தண்ணீர்வரத்து அதிகரித்ததால் ஏரி நிரம்பியது. தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் வந்து தண்ணீரைப் பார்த்து மகிழ்ந்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share