^தொடர்ந்து 48 மணி நேரம் நடித்த விஷால்

Published On:

| By Balaji

அயோக்யா படத்தின் முக்கிய காட்சிக்காக நடிகர் விஷால் தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு செட்டிலேயே பணிபுரிந்துள்ளார்.

விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பி.மது தயாரித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரம்மாண்டமான நீதிமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையவிருக்கும் நீதிமன்ற காட்சியை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து படம்பிடித்து வருகின்றனர்.

நடிகர்கள் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்ஷி, ராஷி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு உட்பட முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுடன் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்களும் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட காட்சி இந்த செட்டில் படம்பிடிக்கப்பட்டது. படத்திலேயே மிக முக்கியமான காட்சி என்பதால் தொடர்ந்து அதில் விஷால் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. விஷாலுடன் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் அவரவருக்கான பகுதியை முடித்துவிட்டு சென்றுவிட்டபோதும், விஷால் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் என்று பராமால் நீதிமன்ற காட்சியில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share