|தேர்வில் ப்ளூவேல் கேள்வி : பெற்றோர் அதிர்ச்சி!

public

ரஷ்யாவில் தோன்றிய ப்ளூவேல் விளையாட்டு இந்தியாவில் பல மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது. மாணவர்களை ப்ளூ வேல் விளையாட்டில் இருந்து மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெற்றோர்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு பள்ளிகள் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் பள்ளித் தேர்வு ஒன்றில் ப்ளூ வேல் குறித்த கேள்வி இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், நேற்று (செப்.17)தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த தேர்வில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாளில் ப்ளூ வேல் விளையாட்டு குறித்து நண்பருடன் விளையாடுவது போன்ற சொந்த கருத்தை 50 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. இந்தி மொழியில் இடம்பெற்றிருந்த அந்தக் கேள்விக்கு 5 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பெற்றோரிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் செல்பேசி பயன்படுத்துவதைக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தும் பள்ளி நிர்வாகமே மாணவர்களிடம் ப்ளூவேல் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது எனப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்வித் துறை வல்லுநரும் உளவியலாளருமான ஜவஹர் சுரிசிட்டி, “மாணவர்களின் நேர்மறையான நிலைப்பாடு மற்றும் அவர்களின் மனதில் உள்ள தவறான கருத்துகளைத் தெரிந்துகொள்ளவே தேர்வில் அத்தகைய கேள்வி கேட்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

ராய்பூரை தளமாகக் கொண்ட டெல்லி பப்ளிக் பள்ளியின் முதன்மை இயக்குநரான ரகுநாத் முகர்ஜி பள்ளியின் நிலைப்பாட்டை விவரித்துள்ளார். அவர், இந்தக் கேள்வி மூலம் ப்ளூ வேல் விளையாட்டில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை ஆசிரியர்களால் அறிந்து கொள்ள முடியும். மாணவர்களும் , ஆசிரியர்களும் ப்ளூ வேல் விளையாட்டில் உள்ள பிரச்சினையை விவாதிக்கவும், அது தொடர்பான அச்சங்களை அழிக்கவும் இந்தக் கேள்வி உதவும்” எனக் கூறியுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0