மக்களைவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் முகாம் நடைபெறாது என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என நேற்று (மார்ச் 10) தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், நேற்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று சேலத்தில் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. இது போன்று, மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தனித்துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் மனுநீதி முகாமும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளவரை நடைபெறாது” என அவர் தெரிவித்துள்ளார்.�,