தேர்தலில் போட்டியிட ‘ட்விட்டர் ஃபாலோயர்’ அவசியம்!

Published On:

| By Balaji

Vமத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு ட்விட்டரில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ஃபாலோயர் இருக்க வேண்டும் என்பது உட்படப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸும் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. களப் பிரச்சாரம் மட்டுமல்லாது சமூக வலைதளப் பிரச்சாரத்திலும் இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் ஆதரவாளர்களைச் [சமாளிக்க](https://minnambalam.com/k/2018/06/18/24) பாஜக தரப்பில் 65 ஆயிரம் இணைய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி மத்தியப் பிரதேச காங்கிரஸ் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், “தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஃபேஸ்புக்கில் 15,000 லைக், ட்விட்டரில் 5,000 ஃபாலோயர்களைப் பெற வேண்டும். வாக்குச் சாவடி அளவில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்திருக்க வேண்டும். கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து சேர் செய்யப்படுவதை லைக் மற்றும் ரீ-ட்விட் செய்ய வேண்டும்” என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் சமூக வலைதளச் செயல்பாடுகள் குறித்த தகவல்களை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share