தேர்தலின் முக்கியப் பிரச்சனை: ரகுராம் ராஜன் சொல்வது என்ன?

public

இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக என்ன இருக்கப்போகிறது என்பது குறித்த தனது கருத்தை ரகுராம் ராஜன் விளக்கியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தற்போது சிகாகோவில் உள்ள பூத் ஸ்கூலில் நிதியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் நடப்பு தேர்தலில் எதிரொலிக்கும் முக்கியப் பிரச்சனை குறித்து *புளூம்பெர்க்* ஊடகத்துக்கு இன்று (ஏப்ரல் 11) அளித்த பேட்டியில், “கடந்த 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் சீர்திருத்த சட்டம், வங்கி திவால் சட்டம் போன்ற பெரிய சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற முக்கியப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்காக மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் தேவைப்படுகிறது. இருப்பினும் அதற்கேற்றவாறு போதுமான நல்ல வேலைகள் உருவாக்கப்படுகிறதா என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், “வேலைவாய்ப்பின்மைதான் மிக முக்கியப் பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரித்துள்ளது என்று பல்வேறு தரவுகள் கூறுகின்றன. 2018ஆம் ஆண்டில் 11 மில்லியன் பேர் வேலையிழந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் கூறுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 2017-18ஆம் ஆண்டில் 6.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையில் இருந்து கசிந்த தரவுகள் கூறுகின்றன.

2050ஆம் ஆண்டில் இந்தியாவில் உழைக்கும் வயது மக்களின் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் பிராந்திய மனித மேம்பாட்டு அறிக்கை மதிப்பிட்டுள்ளது. புதிய வீடுகள் கட்டுதல், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே கட்டமைப்பு பணிகளால் இந்தியாவில் கட்டுமானத் துறை வளர்ச்சியடையும். இத்துறையின் வளர்ச்சிக்கு நியாயமாக மற்றும் எளிதாக நிலம் கையகப்படுத்த தீர்வுகளைக் காண வேண்டியது மிகவும் அவசியமானது” என்றார்.

மேலும் ”விவசாயத் துறையில் ஈடுபட்டிருக்கும் அதிகப்படியான மக்கள் அதைவிட்டு வெளியேறி உற்பத்தித் துறைகளுக்கும், சேவைத் துறைகளுக்கும் செல்ல வேண்டும். ஏற்கெனவே அதிலிருந்து வெளியேறியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்” என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0