[தெலுங்கு நடிகைகளுக்கு வந்த சோதனை!

public

தெலுங்கு நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவிடம் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

தெலுங்கு, கன்னட நடிகைகளைக் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்து, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தம்பதிகளான கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரைக் அமெரிக்கவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாதா கனடாவில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகுத் தனது குடும்பத்தாரைச் சந்திக்க வான்கூவர் நகரில் இருந்து அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க விமான நிலையத்தில் மெஹ்ரீன் தான் ஒரு நடிகை அதுவும் தெலுங்கு நடிகை என்று கூறியதும் குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரிடம் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

[விபச்சார வழக்கில்](http://www.minnambalam.com/k/2018/06/16/87) கிஷன் கைதான பிறகு தெலுங்கு நடிகைகள் அமெரிக்கா சென்றாலே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை மெஹ்ரீனிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். மெஹ்ரீன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு இருந்ததால் இந்த விஷயம் தெரியாமல் இருந்துள்ளது.

நடிகைகள் அமெரிக்காவுக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது, அதனால் தான் அமெரிக்காவுக்கு வரும் அனைத்துத் தெலுங்கு நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதாக” அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிரமத்திற்கு மன்னிப்பும் அவரிடம் கேட்டுள்ளனர்.

ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் நோட்டா படம் மூலம் அர்ஜுன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் நடிக்க வுள்ளார். அந்தப் படத்தின் ஹீரோயின் மெஹ்ரீன் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *