தமிழகத்தில் இந்த ஆண்டு 27 மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவில்தான் இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக,வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் ஆய்வு மேற்கொண்டோம். இதில் ஏப்ரல் மற்றும் மார்ச் மாதங்களில் கடல் நீரின் வெப்ப நிலை, காற்றழுத்தம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
இதனால் , தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை சராசரியான அளவில் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,