தென்மாநிலங்களின் குறைகளைக் களையுமா ஒன்றிய அரசு?

public

தென் மாநிலங்களின் தொடர் கோரிக்கையையடுத்து நிதிக்குழு வரன்முறைகள் குறைத்து ஆராய பிரத்யேக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

15ஆவது நிதிக் குழுவின் பணி வரன்முறை தென்மாநிலங்களில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இதற்குப் பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சரும் தலைமை அமைச்சரும் இந்தக் கொந்தளிப்பு தேவையில்லாதது; அனைத்தும் சட்டப்படியும் நியாயமாகவும்தான் உள்ளன என்று மீண்டும் மீண்டும் மறுப்புத் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே சில தென்மாநிலங்களின் சிறப்புக் கூட்டம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே இன்று வந்திருக்கும் அறிவிப்பில் நிதிக் குழுவின் வரன்முறையை மீளாய்வு செய்ய ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இக்குழுவின் ஆய்வுக்குப் பிறகு தென்மாநிலங்களின் குரல் நியாயமானதுதான் என்பது தெரியவரும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0