~தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் ஆலியா

Published On:

| By Balaji

பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் ஆலியா பட் தற்போது தென்னிந்தியத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

பாகுபலி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் புதிய படத்துக்கு ஆர்.ஆர்.ஆர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ஆலியா பட் இணைந்துள்ளார். தற்சமயமாக விமானத்தில் சந்தித்த ஆலியாவிடம் ராஜமௌலி இப்படத்தின் கதையைக் கூற அவர் உடனே நடிக்க சம்மதித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் படத்துக்காக நடத்தப்பட்ட பிரத்யேக பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர்.

ஆலியா பட் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க, பிரிட்டிஷ் நடிகை டெய்சி எட்ஜர் ஜோன்ஸ் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கிறார். அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இரண்டு கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு இந்த மாத இறுதியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை புனே, அகமதாபாத் பகுதிகளில் தொடங்கவுள்ளனர். 1920 காலகட்டத்தை உருவாக்கவுள்ளதால் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் படப்பிடிப்பை நிறைவு செய்து அடுத்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் உட்பட 10 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share