தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்- சுப்புலட்சுமியின் மகன் அருண்குமாருக்கும், பேச்சிராமன் – வள்ளி ஆகியோரின் மகளான திருநங்கை ஸ்ரீஜாவுக்கும் இருவீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். ஸ்ரீஜா பி.ஏவும், அருண்குமார் டிப்ளமோவும் படித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சங்கமேஸ்வர் கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்ய முயற்சித்தனர். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க மறுத்தனர்.
இதையடுத்து அங்குக் கூடியிருந்த இளைஞர்களும், திருநங்கைகளும் கோயில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதன்பிறகு காவல் துறையினர் தலையிட்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இருப்பினும் கோயில் நிர்வாகத்திலிருந்து திருமணம் செய்ததற்கான ரசீது மற்றும் சான்றிதழ்கள் வழங்காததால் இவர்களால் திருமணத்தைப் பதிவு செய்ய இயலவில்லை. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இருவரும் மனு அளித்தனர். இதையடுத்து தூத்துக்குடி பதிவு அலுவலகத்தில் இருவருக்கும் திருமணப் பதிவு நடந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பதிவுத் திருமணம் செய்த முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”