தூக்கத்தை மேம்படுத்த விரும்பும் 73% இளைஞர்கள்: ஆய்வு!

Published On:

| By Balaji

இந்தியாவில் 73 சதவிகித இளைஞர்கள் தூக்கத்தை மேம்படுத்த விரும்புவதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கம் குறித்து இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 11,006 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூக்கத்தின் ஆரோக்கியம் குறித்து இந்திய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆய்வின் முடிவுகளை சுகாதார தொழில்நுட்பத்தின் சர்வதேச தலைவர் ராயல் பிலிப்ஸ் “The Global Pursuit of Better Sleep Health” என்ற தலைப்பில் நேற்று முன்தினம்(மார்ச் 14) வெளியிட்டார்.

ஆய்வில், 73 சதவிகித இளைஞர்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், 55 சதவிகிதத்தினர் நன்றாக தூங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். 38 சதவிகிதத்தினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தூக்கம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது உயர்ந்துள்ளது.

34 சதவிகித இளைஞர்கள் தூக்கத்தை பற்றியும், அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. 24 சதவிகித இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தூக்கம் குறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் 31 சதவிகித இளைஞர்கள் தூக்கத்தினை அதிகரிக்க யோகா செய்வதாக கூறியுள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் இயற்கையாகவோ,பரம்பரையாகவோ தூக்கத்தில் குறட்டை விடுகின்ற பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

மேலும் டெல்லி (47%), மும்பை(84), பெங்களூர்(88), லக்னோ(70%) என குறிப்பிட்ட இடங்களில் தூக்கத்தின் அளவு குறைந்து காணப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 500க்கும் மேற்பட்ட தூக்கத்திற்கான ஆய்வுக் கூடங்களையும், 400 தூக்கத்தில் சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கியுள்ளார் ராயல் பிலிப்ஸ்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share