^துப்பாக்கிச் சூட்டில் எம்எல்ஏ பலி!

Published On:

| By Balaji

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், அம்மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ உட்பட 7 பேர் பலியாகினர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் திராப் மாவட்டம் போகபானி எனுமிடத்தில், இன்று (மே 21) மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ திரோங் அபோ உள்பட 7 பேர் பலியாகினர். அஸ்ஸாமிலுள்ள திப்ரூகரில் இருந்து கோன்சா எனுமிடத்துக்குத் தன் குடும்பத்துடன் திரோங் அபோ வந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் மேகாலயா முதலமைச்சருமான கான்ராட் சர்மா. திரோங் அபோ மற்றும் அவரது குடும்பத்தினர், பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இதற்குக் காரணமானவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இதேபோல, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டுவும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீதான வேட்டை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

கான்ராட் சர்மாவின் கட்சியைச் சேர்ந்த திரோங் அபோ, அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கோன்சா தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இத்தொகுதியில் மறுதேர்தல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட்டதால், தீவிரவாத இயக்கங்கள் சிலவற்றின் எச்சரிக்கைக்கு ஆளானார்.

இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திரோங் அபோ உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டதற்கு நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் எனும் பயங்கரவாத அமைப்பே காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)

**

.

.

**

[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)

**

.

**

[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share