தெலுங்கு ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் நயன்தாரா அப்படத்தின் பாடல் காட்சிக்காக துபாய் சென்றுள்ளார்.
தமிழில் பிஸியான நடிகையாக வலம்வருகிறார் நயன்தாரா. அவரது நடிப்பில் தற்போது மூன்று தமிழ் படங்கள் தயாராகிவருகின்றன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் கவனம் செலுத்திவரும் அவர், பாலகிருஷ்ணாவின் ஜெய் சிம்ஹா படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இப்படத்தின் பாடல் காட்சிக்காக துபாய் சென்றுள்ளதாக நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதுடன் [புகைப்படங்களையும்](https://twitter.com/NayantharaU/status/941316383563948032) வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது பாலகிருஷ்ணாவின் 102ஆவது திரைப்படத்தில் நடித்துவரும் அவர் படத்தை முடிக்கும் வேளையில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து தெலுங்கில் கோபி சந்த் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,