?துணைத் தேர்வுகள் ரத்து!

Published On:

| By Balaji

பத்தாம், பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில் பத்தாம், பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வு மற்றும் ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வு ஆகிய தேர்வுகள் மட்டும் நடத்தவும், பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வினை ரத்து செய்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் செப்டம்பர், அக்டோபர் பருவத்தில் பத்தாம், பதினோராம், பனிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது. தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச், ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வினைப் பள்ளி மாணவராகவும், தனித்தேர்வராகவும் எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு உடனடித் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 2019 ஜூன் முதல் மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கும் ஜூன், ஜூலை பருவத்தில் தேர்வு நடத்தப்படும். இதனால் பத்தாம், பதினொன்றாம், பன்னிரன்டாம் வகுப்புத் தேர்வர்கள் உடனடி சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துத் தேர்வெழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share