தீவிரவாதிகளுக்குக் கதவு திறந்துவிடும் மோடி: ராகுல்

public

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு மோடி கதவைத் திறந்துவிடுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 28ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது உஜ்ஜயினியில் இருக்கிறார். நேற்று (அக்டோபர் 29) காலை அங்குள்ள புகழ்பெற்ற மஹா காளேஸ்வர் கோயிலுக்குச் சென்ற அவர் வழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர் உஜ்ஜயின் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

“பிரதமர் மோடியின் தவறுகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பற்றி எரிகிறது” என்று தெரிவித்தார். தொடர்ந்து, “ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான ‘ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை இதுவரை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் மோடி பொய் கூறி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு தன்னை ஓய்வுபெற்ற சில ராணுவ அதிகாரிகள் சந்தித்தனர், அவர்கள், ‘ஒரு பதவி ஒரே ஓய்வூதிய’ திட்டத்தில் மோடியை மிகவும் நம்பியிருந்ததாகவும், தற்போது மிகுந்த வேதனையடைவதாகவும் கூறினார்கள்” என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் குறிப்பிட்டு பேசிய, ராகுல், பிரதமர் செய்த தவறுகளால் அம்மாநிலம் பற்றி எரிவதாகத் தெரிவித்தார். அதாவது, ஜம்முவில் தீவிரவாதிகளுக்கு மோடி கதவைத் திறந்துவிட்டதாகவும், இதுவரை தாக்குதல்களால் அரசியல்வாதிகள் யாரும் தியாகிகளாகவில்லை, ராணுவத்தினர்தான் உயிரிழந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக், ராணுவம், கடற்படை பற்றி பேசி வரும் மோடி, அதனைச் செயல்படுத்திய ராணுவ வீரர்கள் குறித்து ஏன் பேசுவதில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய ராணுவ வீரர்களுக்கு மோடி என்ன செய்தார் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்.

வேலை வாய்ப்பை ஏற்படுத்தச் சொன்னால், படித்த இளைஞர்களைப் பக்கோடா விற்கச் சொல்கிறார். நீங்கள் (மோடி) பக்கோடா வறுத்தால் அந்த எண்ணெயிலிருந்து பாஜக பணத்தை எடுத்துக்கொள்ளும். அது மட்டுமின்றி வறுத்த பக்கோடாவையும் பாஜக தின்றுவிடும் என்று விமர்சித்துள்ளார்.

விஜய் மல்லையா நாட்டை விட்டுச் செல்லும் முன், நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் 40 நிமிடங்கள் பேசியிருக்கிறார். நிதியமைச்சருக்குக் கீழ் பல்வேறு விசாரணை அமைப்புகள் இருக்கும்போது, அவர் அது குறித்து தெரிவித்திருக்கலாம் என்று ராகுல் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார். காங்கிரஸ் முதல்வர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டு வேறு முதல்வர் பதவியேற்பார் என்றும் தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *