அமர காவியம், இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து என தமிழ் ரசிகர்கள் ரிலாக்ஸாகப் பார்த்த பரபரப்பில்லாத திரைப்படங்களில் நடித்து, ஹோம்லி கேரக்டருக்குப் பொருத்தமான ஹீரோயின் என்ற பெயர் பெற்ற மியா ஜார்ஜ் தற்போது டோலிவுட் பக்கம் சென்றிருக்கிறார்.
மலையாளத்தில் பிசியான ஹிரோயினாக இருந்த மியா ஜார்ஜை, தமிழ் சினிமா அழைத்துக்கொண்டுவந்து அவரது முன்னேற்றத்தைத் தடுத்து விட்டது எனலாம். அங்கு குறைந்த கால்ஷீட்டில் அதிக படங்கள் நடித்துக்கொண்டிருந்தவரை, கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோயின் லெவலுக்குக் கொண்டுசென்றது தமிழ் சினிமா. எனவே, இனி இங்கிருப்பது சரிவராது என உணர்ந்தவர் தெலுங்கில், கிராந்தி மாதவ் இயக்கத்தில் சுனிலுக்கு ஜோடியாக ‘உங்கரலா ராம்பாபு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
[ட்ரெய்லர்](https://www.youtube.com/watch?v=mBgvrtMLRIs) வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால், IANS நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து மியா பகிர்ந்துகொண்டுள்ளார்.
**கிராந்தி படத்தின் கதையைச் சொன்னபோதே எனக்குப் பிடித்துவிட்டது. இப்படியொரு திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாவதுதான் சரியெனத் தோன்றியதால் உடனே தலையாட்டிவிட்டேன். நான் நடித்திருக்கும் சாவித்திரி கேரக்டர், சாதாரண ஹீரோயின் கேரக்டர் கிடையாது. படத்தின் முக்கியமான இடத்தில், சாவித்திரியின் கேரக்டர் மாறுவதுதான் இந்தப் படத்தின் ட்விஸ்ட். அப்படிப்பட்ட ஒரு கேரக்டரை நான் எடுத்து நடிக்க வேண்டும் எனத் தோன்றியது. தெலுங்கு தெரியாமல் இந்த கேரக்டரை எப்படி திரையில் கொண்டுவரப்போகிறேன் என யோசித்தேன். ஆனால், கிராந்தி மற்றும் சுனில் எனக்கு ஒவ்வொரு காட்சியையும் விவரித்து சொல்லிக்கொடுத்ததில் அந்த சுமையே இல்லாமல் படத்தை முடித்துவிட்டேன்** என்று கூறியிருக்கிறார்.
மியா சொல்வதைப் பார்த்தால் இனி தமிழ் சினிமாவின் பக்கமே வரமாட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், தமிழ் சினிமா ஒரு நல்ல ஹீரோயினை இழந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.�,”