திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், இன்று இரண்டாவது நாளாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சிலைகள் காணாமல் போனது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர் கோயில்களில் உள்ள சிலைகளின் உண்மைத் தன்மை குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4,359 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், தொல்லியல் துறை அதிகாரிகளும், ஏற்கனவே இரண்டு கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர். இதில், 504 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
நேற்று (நவம்பர் 14) முதல் அங்கு மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர். பத்தூர் விஸ்வநாத சுவாமி ஆலயம், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 19 கோயில்களின் சிலைகள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இரண்டாவது நாளான இன்றும் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 1,000க்கும் மேற்பட்ட சிலைகளின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் நீதிமன்றத்தில் விரைவில் ஒப்படைக்கப்படும். சிலைகள் ஆய்வுப்பணியின் போது கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்” என்று தெரிவித்தார் தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன்.�,”