திருவாரூரில் இன்று பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஸ்டாலின்

public

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தனது முதல் பிரச்சாரத்தை ஸ்டாலின் இன்று (மார்ச் 20) திருவாரூரில் தொடங்கவுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். தேர்தல் அறிக்கையும் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்தகட்டமாகத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை திமுக முன்னெடுத்துள்ளது

ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்திய நிலையில், மக்களவைத் தேர்தலுக்காகத் தனது முதற்கட்ட பிரச்சாரத்தைத் திருவாரூரில் ஸ்டாலின் தொடங்கவுள்ளார்.

கலைஞர் இல்லாமல் சந்திக்கப் போகும் முதல் தேர்தல் என்பதால், கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற பின்னர் நேற்று மாலை திருவாரூர் புறப்பட்டு வந்திருக்கிறார் ஸ்டாலின். முன்னதாக கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளிடமும், சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாளிடமும் அவர் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து திருவாரூர் வந்த அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். பின்னர் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் உட்பட முன்னாள் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.

மார்ச் 21 தஞ்சையிலும், மார்ச் 22 பெரம்பலூரிலும், மார்ச் 23, சேலம் (கோட்டை மைதானம்) தருமபுரியிலும் (ஒடசல்பட்டி) என அடுத்தடுத்த தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஸ்டாலின் ஏப்ரல் 6ஆம் தேதி விழுப்புரம், ஆரணி, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடிக்கவுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *