[திருவண்ணாமலை: செல்போனுக்குத் தடை!

Published On:

| By Balaji

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது செல்போன் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இத்தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழா, கடந்த14ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

போலீசாரின் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான ‘நிறைவாழ்வுப் பயிற்சி’, வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(நவம்பர் 16) நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை மாவட்ட மற்றும் வேலூர் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசினார் சிபி சக்கரவர்த்தி. திருவண்ணாமலையில் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது,கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கட்டாயம் அனுமதி கிடையாது. செல்போனுடன் வரும் பக்தர்கள் கோயிலுக்குள்அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலுக்குள் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாருக்கும் செல்போன் வைத்திருக்க அனுமதி இல்லை.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ஆன்லைன் பார்க்கிங் அறிமுகப்படுத்தியுள்ளோம். “tvmpournami.in” என்ற இணையதளம்மூலம், தங்கள் வாகனங்களை நிறுத்தப் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். பக்தர்கள் செல்லும் வழித்தடங்களில் 265கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருவிழாவில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்” என்று அவர்தெரிவித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share