இந்தியாவில் பொதுவாக பெண்கள் தங்களுடைய பெயருக்குப் பின் தந்தையின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். திருமணத்துக்குப் பிறகு கணவரின் பெயரைக் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால், திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் குறிப்பிட்டிருப்பதை மாற்றி கணவர் பெயரைக் குறிப்பிட வேண்டியுள்ளது. இதனால், பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்கிற நடமுறை சிக்கல் நிறைந்ததாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சார்பில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பேசினார்.
அப்போது அவர், “பெண்கள் திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில், தந்தை பெயர் இருந்தால், திருமணத்துக்குப் பிறகு கணவர் பெயரைச் சேர்க்க பெயர் மாற்றம் செய்யாமல் அதே பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம். மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும்” என்று கூறினார்.�,