திருப்பரங்குன்றம்: விரைவில் தீர்ப்பு வழங்க மனு!

Published On:

| By Balaji

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியையும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் நேற்று (மார்ச் 10) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் வழக்கு நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் டாக்டர் சரவணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் முறையீடு செய்யப்பட்டது.

தேர்தல் வழக்கு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிமன்றம் இது தொடர்பாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டதற்கும், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் எதிராக திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share