[திருநங்கையை களமிறக்கிய ஆம் ஆத்மி!

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி திருநங்கையை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் நேற்று(மார்ச் 29) டெல்லியில் அறிவிப்பொன்றை வெளியிட்டார். பிரயாக்ராஜ் எனப்படும் அலகாபாத் தொகுதியில் சிற்பி பவானி நாத் வால்மீகி என்ற திருநங்கை போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி.யாக நாடாளுமன்றம் செல்லும் முதல் திருநங்கை என்ற பெருமையை பவானி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், திருநங்கை சமூகத்திற்கு ஆம் ஆத்மி கட்சி மரியாதை அளிப்பதை நிரூபிக்கும் முதல் சம்பவமாக இது அமையும் என தெரிவித்தார்.

46 வயதான சிற்பி பவானி நாத் வால்மீகி ஒரு சமூக ஆர்வலர். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடுவராக பங்கேற்றார். 2016ஆம் ஆண்டு அகில் பாரதீய இந்து மகாசபா கின்னார் அகதா

அமைப்பின் தலைவரானார். இதுகுறித்து இவர் கூறுகையில், “திருநங்கையாக இருப்பதால் பல விதங்களில் நாங்கள் கஷ்டப்பட்டிருக்கிறோம். பாஜக எங்களை பிச்சைக்காரர்களைப்போல நடத்தியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியும்தான் எங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக போராடியது” என கூறினார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share