அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிரேஸ் பானு என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஜூன் 14) நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி நலவாரியம் தொடங்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில் 2015ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்றாம் பாலினத்தவர்களுக்குச் சலுகை வழங்கும் வகையிலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்ய வகை செய்யும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”