பாடசி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் சுசி லீக்ஸ் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வந்தது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அப்போது நடிகர் ராணா, திரிஷாவுக்கு முத்தம் கொடு்ப்பது புகைப்படமும் வந்தது. ஆனால் இது நான்கு வருட பழைய புகைப்படம். ஏற்கனவே வெளிவந்த இந்த படம் ராணாவுடன் நெருக்கமான நட்பில் திரிஷா இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளிவந்தவை.இவை மீண்டும் சுசி லீக்ஸ் பேக் ஐடியில் வந்த போது இந்த படமும் வந்தது. ஆனால் பிறகு இதற்கு விளக்கம் அளித்த சுசித்ரா , யாரோ எனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படி செய்கிறார்கள் என்று கூறினார். இந்த புகைப்படம் குறித்து ராணாவும், திரிஷா எந்த கருத்தையும் கூறாமல் இருந்தனர்.
தற்போது பாகுபலி படத்தின் மேக்கிங் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் ராணாவிடம் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘மீடியா தான் இது போன்ற விஷயங்களை பெரிதாக்கி ஆதாயம் தேடுகிறது. நான் அப்படி எதுவும் செய்யவில்லை.’ இது போன்ற பல புகைப்படங்கள் இருக்கும் போது, என்னை மட்டும் இலக்கு வைத்து கேட்பது நான் பிரபலமாக இருப்பதால்தான் இதையெல்லாம் பெரிய விஷயமாக எழுதாதீர்கள் ‘ என்று பதில் கூறியிருக்கிறார்.�,