திராவிட இயக்கங்களே வறட்சிக்குக் காரணம்:ஹெச்.ராஜா

public

தமிழகத்தில் நிலவும் வறட்சிக்குக் காரணம் திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாரதிய மாநில செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை(இன்று) நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்துக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

மோடிக்கு எதிராக ஏவிவிடப்பட்ட அம்பு தான் விவசாய அமைப்பு. மோடியின் செல்வாக்கை குறைக்கவே விவசாயப் போராட்டம் நடத்தப்பட்டது.தமிழக மக்களை அசிங்கப்படுத்தவே நிர்வாணப் போராட்டம்,குட்டிக்கரணப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர்.புதுச்சேரி ஆளுநருடன் முதல்வர் நாராயணசாமி சண்டையிடுவதை விட்டு விட்டு சிறப்பான ஆட்சியை நடத்தவேண்டும்.

மேலும், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது உண்டு, ஆனால் தினகரன் காசு கொடுத்து சின்னத்தையே வாங்க முயன்றது மிகவும் கொடுமையானது என்று தெரிவித்தார்.

இதேபோல் சென்னை தியாகராஜநகரில் ஏப்ரல் 27 ஆம் தேதி வியாழக்கிழமை (இன்று) மாலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ’காவிரி டெல்டா விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது திமுக தான். தமிழகத்தில் நிலவும் வறட்சிக்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான் காரணம்.அதேபோல் தமிழிசை குறித்து அவதூறாகப் பேசிய துரை முருகனை வன்மையாகக் கண்டிக்கிறேன் ’என்று அவர் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *