திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் காலமானார்!

Published On:

| By Balaji

திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் சட்ட சீர்திருத்தக் குழு உறுப்பினருமான ஆண்டிமடம் எஸ். சிவசுப்பிரமணியன் இன்று காலமானார்.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த எஸ்.சிவசுப்பிரமணியன். சில ஆண்டுகளுக்கு முன்பு பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட சிவசுப்பிரமணியன், அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில் இன்று (ஜூன் 14) காலை அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 82. அவரது இறுதி ஊர்வலம் ஆண்டிமடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான தேவனூர் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட சிவசுப்பிரமணியன், 1989ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 1998-2004 வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரும்போதெல்லாம், இவரை சென்று சந்தித்து உடல்நலம் விசாரிக்காமல் செல்லமாட்டார்.

தனது இளமைக் காலத்தில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தந்தை பெரியாரின் தொண்டராகப் பணியாற்றி சிவசுப்பிரமணியம், 1960 முதல் 1966 வரை தமிழ்நாடு எங்கும் தந்தை பெரியார் கலந்துகொண்ட கூட்டங்களில் அவருடன் சுற்றுப்பயணம் செய்தவர்.

1977 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய சிவசுப்ரமணியன், 1972 முதல் 1992 வரை ஆண்டிமடம் ஒன்றிய திமுக செயலாளராகவும், 1983 முதல் 1991 ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட துணை செயலாளராகவும் பணியாற்றி வந்ததோடு, தலைமை செயற்குழு உறுப்பினராகவும், வெளி மாநில தொடர்புச் செயலாளராகவும், அரியலூர் மாவட்ட அவைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சிவசுப்பிரமணியனின் பணியை கௌரவப்படுத்தும் வகையில் 2015ஆம் ஆண்டு திமுகவின் முப்பெரும் விழாவில் பெரியார் விருது வழங்கப்பட்டது. இவரது மகன் எஸ்.எஸ்.சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது அரியலூர் மாவட்ட கழக செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share