`திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?

Published On:

| By Balaji

இந்நேரம் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஜெயித்திருந்தால், அல்லது மாநிலக் கட்சிகள் வலுவாக ஜெயித்திருந்தால் நம்மில் யார் மத்திய அமைச்சர் என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்திருக்கும்.

ஆனால் இப்போது நிலைமை வேறாகிவிட்டது. மத்தியில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் திமுக எம்.பி.க்களுக்கு அமைச்சர்களாகும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் மக்களவையில் திமுகவின் தலைவர் யார் என்ற கேள்வி கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக எழுந்திருக்கிறது.

மம்தா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸுக்கு 22 எம்.பி.க்கள், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 22 எம்.பி.க்கள் கிடைத்திருக்கும் நிலையில் திமுகவுக்கு விழுப்புரம் ரவிக்குமார், ஈரோடு கணேசமூர்த்தி, நாமக்கல் சின்ராஜ், பெரம்பலூர் பாரிவேந்தர் ஆகிய உதயசூரியன் சின்னத்தில் ஜெயித்த எம்.பி.க்கள் உட்பட 23 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இதனால் பாஜக, காங்கிரசை அடுத்து மூன்றாவது பெரிய கட்சி அந்தஸ்து பெற்றிருக்கிறது திமுக.

இதனால் திமுகவின் மக்களவைக் குழுவுக்கு யார் தலைவர் என்ற பேச்சு அக்கட்சி வட்டாரங்களில் ஆர்வத்தோடும் பரபரப்பாகவும் பேசப்படுகிறது.

சீனியரான டி.ஆர்.பாலு ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர். சமீப காலமாக ஸ்டாலினுக்கு அனுக்கமாக இருப்பவர். அதேநேரம் இப்போது திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவராக இருக்கும் கனிமொழி,மக்களவையில் திமுக எம்.பி.க்கள் இல்லாத நிலையிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்று ஸ்டாலினால் பாராட்டப்படவர். இவர்கள் இருவரின் பெயர்களும் மக்களவை திமுக குழுத் தலைவர் பதவிக்கு முதல் கட்டமாக பேசப்படுகின்றன.

மேலும் ஆ.ராசா, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம் போன்ற மக்களவை அனுபவம் மிக்கவர்களும் இப்போது ஜெயித்திருப்பதால் திமுக மக்களவைக் குழுத் தலைவராக ஸ்டாலின் யாரைத் தேர்வு செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு பதில் அறிய திமுகவுக்குள் ஆர்வம் அதிகரித்துள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)

**

.

**

[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share