சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர், ‘தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. இத்தனை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் இன்னும் சீரான சாலைகள் இல்லை. மின் தட்டுபாடு இருக்கிறது. நிர்வாகத்தில் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல். இதனை மாற்ற வேண்டும். தேர்தலில் சாதி, மதம் பார்த்து வேட்பாளர்களைத் தேர்வுச் செய்யக்கூடாது. கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸும் சந்தர்ப்பவாத கட்சிகள். இவர்கள் எல்லோருக்கும் இந்தத் தேர்தலில் பாடம் புகட்டவேண்டும். திமுக, அதிமுக-வை தமிழ்நாட்டு மக்கள் அப்புறப்படுத்த வேண்டும். மோடியின் 18 மாத கால ஆட்சியில் ஒரு ஊழல்கூட நடைபெறவில்லை. ஊழலில்லாத ஆட்சி அமைய பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று கூறினார்.�,
திமுக, அதிமுக-வை அப்புறப்படுத்த வேண்டும்: வெங்கையா நாயுடு
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel