திமுகவினரின் மது ஆலைகள் மூடப்படும் – கருணாநிதி உறுதி

Published On:

| By Balaji

திமுக தலைவர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், நிச்சயமாக மீண்டும் முதல்வராவேன். தனிப்பெரும்பான்மை பெரும் அளவிற்கு திமுகவுக்கு இடங்கள் கிடைக்கும். அப்படி முதல்வராகும்போது, தமிழ்நாட்டு மக்களுக்காக ஏற்கனவே செய்த பல நல்ல திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையிலேயே ஜெயலலிதா ஆட்சியில்தான் அதிகமான துன்பங்களைச் சந்தித்தேன். அவர் என்னையும், எனது குடும்பத்தினரையும் வதைத்தார். அது, என்னை அதிகமாகப் பாதித்தது. அதேநேரத்தில், அந்த நிகழ்வுகள் எல்லாம் என்னை இன்னும் வேகமாகப் பணியாற்றுவதற்கு உந்துசக்தியாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகால மோசமான ஆட்சிக்கு சென்னை வெள்ளமே சாட்சி. கடைசி நிமிடத்தில் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரிமூலம் சென்னை நகரமே வெள்ளக்காடானது. இதற்கு, முதல்வர் ஜெயலலிதாவே காரணம். மூன்றாவது அணியை எங்கும் தேடிப் பார்க்கிறேன். ஆனால், கண்டுபிடிக்க இயலவில்லை. மக்கள் மாற்றத்தைத் தர தயாராக இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் நிலவுகிறது. அதனால்தான் அவர்கள் சமூக வலைதளங்கள்மூலம், மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். அந்த மாற்றத்தை திமுக அளிக்கும். நானும், ஸ்டாலினும் பதவிக்காக இந்த இயக்கத்தில் இணையவில்லை. நாங்கள் இருவரும் கட்சிக்காகப் பணியாற்றுகிறோம். கட்சியில் உள்ள தொண்டர்களைப்போன்றே நாங்களும் பலன்களை அனுபவிக்கிறோம். திமுகாவால் மதுவிலக்கை கொண்டுவர முடியாது என்று சொல்வது பரப்புரையல்ல, பசப்புரை. தமிழகத்தில் திமுகவினர் யாரும் சொந்தமான மது ஆலைகள் நடத்தினால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை மூடப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel