நாய்க் கறியா, ஆட்டுக்கறியான்னு இவங்க கிளப்பிவிட்டது எங்க வீடு வரைக்கும் எதிரொலிக்குது. வழக்கமாக கறி வாங்கிட்டு வரும்போது ரெண்டு நாய் வாசல்ல வந்து வாலை ஆட்டிகிட்டு நிக்கும். நேத்து என்னடான்னா ஒண்ணையும் காணோம். எங்க அப்பா என்னைய ஒரு மாதிரி பார்க்குறாரு. இப்படி ஒரு புரளியை கிளப்பிவிட்டு குடும்பத்துக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்திவிட்டுட்டாங்க. மனுசன் ரசத்தை ஊத்தி தான் சாப்பிட்டு போனாரு. அவருக்கு இன்னும் அந்த கடுப்பு இருக்கும் போல. காலையில மொபைல் எடுத்து பார்த்துகிட்டு இருந்தேன்.. ‘ஹெலிகாப்டரை கீழே இருந்து அண்ணார்ந்து பார்த்து கும்பிட்டவங்க எல்லாம் இன்னைக்கு அதே ஹெலிகாப்டர்ல தாழ்வா பறந்து ஹாயா போய்கிட்டு இருக்காங்க.. நீ இன்னும் போனை நோண்டிகிட்டே இரு’ன்னு கோபமா போயிட்டாரு. ஹாயா பறந்தவர் நிலைமை என்ன ஆச்சுன்னு கீழே அப்டேட்டை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
**@ஜெ.வி.பிரவீன்குமார்**
தூரத்துல சாப்பாடு இருக்குறமாதிரி தெரியுது, அதனால எனக்கு இப்ப பசிக்கலாம்போல இருக்கு” என ஏதேனும் ஆங்கில சேனலில் தமிழ் மொழிபெயர்க்கப்பட்டால் அது காமெடியாகவும்,
இதுவே ஏதேனும் கவிஞர்களால் எழுதப்பட்டால் ஆகச்சிறந்த நவீனக் கவிதையாகவும் நம்மால் பார்க்கப்படுகிறது.
**@Bharathi Vasan**
அதெல்லாம் சரி.
ரயிலில் கொண்டு வந்தது ஆட்டுக்கறிதான் என்று ஆய்வு முடிவை அறிவித்துவிட்டீர்கள்.
பத்துநாட்களாக மூளைக்குள் உட்கார்ந்திருக்கிற ‘நாய்க்கறி’யை எப்படித் தூக்கி வெளியே எறிவது….
**@Kozhiyaar**
இன்றைய காலக்கட்டத்தில் ‘எவர் முகத்தில் விழித்தோம்’ என்ற ஐயமே இருப்பதில்லை!!
பெரும்பாலானவர் கைப்பேசி முகத்தில் தான்!!!
**@Akku_Twitz**
“எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சியே!”
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி நடத்திய அய்வில் தகவல்!
தனிப்படைக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல்
**@Thaadikkaran**
சமூக ஆர்வலர்கள் வீட்டுக்குள்ளே அமர்ந்து விமர்சனம் செய்கின்றனர்; மக்கள் நம்ப வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
# வழக்கமா சமூக விரோதின்னுதானே சொல்வீங்க..!
**@Kozhiyaar**
அன்பையும் கோபத்தையும் மறைத்து வைப்பதே நம்மின் பெருமபாலான பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விடுகிறது!!!
**@ajmalnks**
நான் ஹெலிகாப்டர் மூலம் சென்று ஒவ்வொரு பகுதியிலும் என்ன மரங்கள் சாய்ந்துள்ளன? எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன? என தாழ்வாக பறந்து கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தேன்- முதல்வர் பழனிசாமி
இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல்இன்ஆல் அழகுராஜா வேனுங்கிறது.
**@rahimgazali**
டீக்கடைல காலை ஒருத்தர் பேசிட்டு இருந்தார்
‘இந்த நேரத்துல செத்துப்போனால்கூட சிக்கல்தான். எரிக்கக்கூட எலக்ட்ரிக் மயானத்துல கரண்ட் இல்லை. விறகு, வரட்டி வச்சுக்கூட எரிக்க முடியாத அளவுக்கு அதெல்லாம்வேற ஈரமா கிடைக்கு’
**@Thaadikkaran**
தொழில் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வர இலக்கு – மோடி
# அப்போ இன்னும் வெளிநாடு போக வேண்டியது இருக்குன்னு சொல்றார் போல..!
**@parveenyunus**
வேர்ல்டு கப் ஃபுட்பால் மேட்ச்ல ஒரு நாடு ஆடணும்னா க்வாலிஃபையர் மேட்ச்ல ஜெயிக்கணும்
# பாஜகவும் முதல்ல நோட்டா கூட ஒரு தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டு பொதுதேர்தல்ல நிக்கலாம்.
**@Thaadikkaran**
உலகிலேயே மிக கடினமாக உழைப்பவர்கள் இந்தியர்கள்
# மீம்ஸ் கிரியேட்டரை சொல்றாங்களோ
**@rahimgazali**
நான் ஹெலிகாப்டர் மூலம் சென்று ஒவ்வொரு பகுதியிலும் என்ன மரங்கள் சாய்ந்துள்ளன என தாழ்வாக பறந்து கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தேன்- முதல்வர் பழனிசாமி
-எங்கே?.. எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன என்று கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்.
**@Thaadikkaran**
காங்கிரஸ் குடும்ப நிறுவனமாக மாறிவிட்டது’- அமித்ஷா
# உங்க குடும்பம் நிறுவனமா மாறின மாதிரியா.!?!?
**@ajmalnks**
பிரதமரிடம் ரூ.15,000 கோடி கோரினேன்- முதலமைச்சர் பழனிசாமி
நாளைக்கே தர்றேன்னு சொல்லி ஒரு டீயை போட்டு கொடுத்து அனுப்பி இருப்பாரே…
**@Fazil_Amf**
மக்கள் எங்களை திரும்பிப் போ என விரட்டுவது வேதனையளிக்கிறது – தமிழிசை உருக்கம்
• இதுக்கு நோட்டவே பரவாயில்லைனு தோணிருக்குமே..!!
**@ஜெ.வி.பிரவீன்குமார்**
‘திமிரு புடிச்சவன்’ என்றொரு படம் பார்த்தேன். தமிழ் சினிமாவுக்கே உரியதொரு நல்ல கதைக்களம். மலையாள நடிகைகளுக்கே உரிய வசீகரம் கொண்ட தமிழ்பெண்ணான நிவேதா பெத்துராஜ். தெலுங்கு சினிமாவையே மிஞ்சும் ஆக்ஷன் காட்சிகள். கன்னட சினிமா நாயகர்களையொத்த விஜய் ஆண்டனியின் முகபாவம்.
மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் அசலான திராவிட சினிமா.
**@kumarfaculty**
பண மதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டது உண்மைதான் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல் – செய்தி
ஆனால் இது வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுனு பிரதமர் சொல்லுவார்.
**@parveenyunus**
அவர் ஒரு புத்தகப்புழு என்பதின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான்..அவர் ஒரு ஃபேஸ்புக் புழு.
**@amuduarattai**
செய்தி: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு கேட்டது என்ன, மத்திய அரசு கொடுத்தது என்ன? – உயரநீ திமன்றம்
பஞ்ச் : தமிழக அரசு கேட்டது மக்களிடமிருந்து பாதுகாப்பு. மத்திய அரசு கொடுத்தது ஹெலிகாப்டர்.
-லாக் ஆஃப்�,”