தாய்மையைக் கொண்டாடிய ‘எமி’க்கு கிடைத்த அன்புப்பரிசு !

Published On:

| By Balaji

நடிகை எமி ஜாக்சன், தனக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று(செப்டம்பர் 23) பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். விக்ரமுடன் இணைந்து நடித்த ‘ஐ’ திரைப்படம் இவருக்குப் பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. மேலும் தனுஷுடன் இணைந்து தங்க மகன், விஜய்யுடன் தெறி, ரஜினிகாந்துடன் இணைந்து 2.0 போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தொழிலதிபர் ஜோர்ஜ் பெனாய்டோ என்பவரைத் தான் காதலிப்பதாக அறிவித்த எமி, தான் தாயாகப் போகும் மகிழ்ச்சியான செய்தியையும் இன்ஸ்டாகிராம் மூலம் உலகிற்கு அறிவித்தார். ஒரு நடிகைக்கு குழந்தை பிறந்தது வெறும் தகவலாக மட்டும் அல்லாமல் செய்தியாக மாற அவர் தனது கர்ப்பகாலத்தின் மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டாடியது தான் காரணம்.

தான் தாயாகப் போவதை நினைத்து மிகவும் பெருமிதம் கொண்ட எமி ஜாக்சன் தாய்மை குறித்தும், தனது குழந்தையின் வளர்ச்சி குறித்தும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பகிர்ந்து வந்தார். அந்த புகைப்படங்களுக்கு பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சி மிக்க வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர்.

இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்து பிறந்த குழந்தை மற்றும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ‘எங்களது தேவதை. உலகிற்கு உன்னை வரவேற்கிறோம் ஆண்ட்ரிஸ்’என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share