?தானியங்கி வேன் விபத்து!

public

உலகின் பல நிறுவனங்கள் தானியங்கி முறையில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நவ்யா என்ற நிறுவனம் தானியங்கி முறையில் செயல்படும் வேன் ஒன்றினை வடிவமைத்து சோதனை மேற்கொண்டது.

அதற்காக அமெரிக்காவின் லாஸ்வேகஸ் நகரில் தானியங்கி கார்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவ்யா நிறுவனத்தின் வேன்களை கியோனிஸ் என்ற போக்குவரத்து நிறுவனம் லாஸ்வேகஸில் இயக்கி சோதனை நடத்தியது. வேனில் 12 பயணிகள் அமர்ந்திருந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த வேன் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சாலைகளில் இயக்கப்பட்டு சோதனைக்குள்ளாகப்பட்டது. முதலில் சரியாக ஓடிக்கொண்டிருந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் அந்த வழியே சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. குறைவான வேகத்தில் மோதியதால் பெரிய அளவில் சேதம் இல்லை. பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் **லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரின் தவறால்தான் இந்த விபத்து நடந்து விட்டது. தானியங்கி வாகனத்திடம் எந்த தவறும் இல்லை** என்று தெரிவித்தனர்.இருப்பினும் தானியங்கி வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சத்தை இந்த நிகழ்வு அதிகரித்துள்ளது. எனவே தானியங்கி கார்களுக்கு அனுமதி வழங்கப்படுவது கேள்விக்குரிய ஒன்றாக உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0