ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘99 சாங்ஸ்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இப்படத்தின் கதையை ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து எழுதியுள்ளார். இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ளது. இப்படத்தில் எடில்ஸி, எகான் உள்ளிட்டோர் நடத்துள்ளனர். இப்படத்தில் மொத்தம் 36 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசையை மையமாக்கிய கதைக்களம் கொண்ட இப்படம் ஜூன் 21ஆம் தேதியன்று ரிலீஸாகும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தற்போது மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “99 சாங்ஸ் படம் பற்றி ரசிகர்களின் ட்வீட்டுகளை நாங்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறோம். உங்களது அன்பாலும், ஆதரவாலும் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள், முக்கியமாக VFX பணிகள் திருப்திகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. படத்தை சிறப்பாக உருவாக்குவதற்கு நாங்கள் எங்களது முழு நேரத்தையும் அர்ப்பணித்து வருகிறோம். முன்பு அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியான ஜூன் 21ஆம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”