:தலைவரானார் பாரதிராஜா

Published On:

| By Balaji

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு பாரதிராஜாவை கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவரும் போது திடீரென இன்று இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இது ஒட்டுமொத்த திரையுலகையும் பாரதிராஜாவின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதற்கான தொடக்கமாக திரையுலக வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பாரதிராஜாவை ஒருமனதாக கொண்டுவருவதற்கு முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

**

மேலும் படிக்க

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

**

[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/09/49)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share