தலைசிறந்த ஏர்போர்ட்: சர்வதேச பட்டியலில் இந்தியா!

Published On:

| By Balaji

சர்வதேச அளவில் தொழில் முறைப் பயணத்தில் சிறந்த விமான நிலையங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் இரண்டு விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.

தொழில் முறை விமானப் பயணங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஆன்லைன் பயண சேவை நிறுவனமான *குளோப் ஹண்டர்ஸ்* சர்வதேச பட்டியலைத் தயாரித்துள்ளது. அதில் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள நரிடா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 81.1 சதவிகித விமானங்கள் சரியான நேர அட்டவணையில் சேவை வழங்கியுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதேபோல, பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் அதிக விமான நிலையங்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

45 விமான நிலையங்களுக்கான இந்த சர்வதேச பட்டியலில் இந்தியாவின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 38ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் 43ஆவது இடத்தில் இருக்கிறது. சரியான நேரத்தில் விமானங்கள் வந்துசெல்வது, விமானங்களின் எண்ணிக்கை, சேவை வழங்கும் இடங்களின் எண்ணிக்கை, விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்துக்கு ஐந்தில் நான்கு நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்துக்கு மூன்று நட்சத்திரம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக மும்பை விமான நிலையம் இரண்டு மாதங்கள் செயல்படாமல் இருந்ததால் பட்டியலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share