‘தர்பார்’ லீக்: காரணத்தை கண்டுபிடித்த படக்குழு!

public

மும்பையில் நடந்து வரும் ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் தொடர்ந்து இணையங்களில் பதியப்பட்டு வைரலாகி வருகின்றன. கடுமையான பாதுகாப்புகளையும் மீறி படங்கள் வெளியான காரணத்தை படப்பிடிப்புக் குழு கண்டுபிடித்துள்ளது.

தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சி உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது. கையடக்க ஆண்ராய்டு மொபைல் இன்று சாமன்யன் முதல் வசதி படைத்தவர்கள் வரை பயன்படுத்தும் பொருளாக உள்ளது.

இத்தொழில் நுட்பம் சினிமா வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரகசியமாக படவெளியீட்டு வரை இயக்குநர்களால் பாதுகாக்கப்படும் படப்பிடிப்பு சம்பந்தமான புகைப்படங்களை உடனுக்குடன் பொதுவெளியில் வெளிவருவதற்கும் இத்தொழில் நுட்பமே காரணமாகி இயக்குநர்களை சங்கடத்துக்குள்ளாக்கி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர்..

ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

அந்தப் படப்பிடிப்பு காட்சிகள் சம்பந்தபட்ட புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைைைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன.

படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்பினருக்கும், இயக்குநருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இம்மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என படப்பிடிப்புக் குழு கண்டுபிடித்துள்ளது.

மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் தர்பார் படப்பிடிப்பு நடக்கிறதாம். அந்தக் கல்லூரி மாணவர்கள்தாம் ஆர்வமிகுதியில் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி நடக்கிறதாம். அது முடியவில்லை என்றால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை மாற்றிவிடலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முருகதாஸ்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *