{தம்பிதுரைக்கு மக்கள் புகட்டிய பாடம் : ஜோதிமணி

public

பணம் இல்லாததால் என்னால் வெற்றிபெற முடியாது என என்னை விமர்சித்து ஜனநாயகத்துக்கு விரோதமாகப் பேசிய தம்பிதுரைக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள் என்று கரூர் ஜோதிமணி கூறியுள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் தம்பிதுரையை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வீழ்த்தியுள்ளார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அவருடைய பேஸ்புக் பக்கத்தில், “என்னை வெற்றி பெறச் செய்த சகோதர,சகோதரர்கள் அனைவருக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். மக்களின் ஒவ்வொரு வாக்கும் மகத்தான அன்பும் நம்பிக்கையும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் அந்த அன்பையும் நம்பிக்கையையும் கைவிட மாட்டோம் என்கிற உறுதியை அனைவருக்கும் அளிக்கிறேன்.

எப்படி தேர்தலில் நம்பிக்கையைப் பெற்று வெற்றிபெற இரவு பகல் பாராது,உணவு, உறக்கம் இன்றி அயராது உழைத்தோமோ அதே போல மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கடுமையாக உழைப்போம்” என்று கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஜோதிமணி இன்று (மே 24) செய்தியாளர்களிடம் பேசுகையில், ”என்னுடைய வெற்றி ஒரு சாமனியனுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் மத்தியில் பணியாற்றக்கூடியவர்கள், பொருளாதார ரீதியாகப் பலமாக உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்காவிட்டால், அவர்களால் வெற்றி பெற இயலாது என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த வாதங்களையெல்லாம் புறந்தள்ளி அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை எனக்கு வாய்ப்பு அளித்தது. கரூர் மக்களவைத் தேர்தலிலும், அரவக்குறிச்சி சட்ட மன்றத் தேர்தலிலும் மத்திய மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் அனைத்தும் எங்களுக்கு எதிராக நடந்துகொண்டன. அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்தன. இவையனைத்தையும்தாண்டி திமுக தலைமையில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளோம்” என்றார்.

தம்பிதுரை மூத்த அரசியல் தலைவர், அதை நான் மதிக்கிறேன், ஆனால் தேர்தலில் எல்லோரும் சமமாகப் போட்டியிடலாம் என்று அவர் கருதவில்லை என்று குற்றம்சாட்டிய ஜோதிமணி, “ஜோதிமணியிடம் பணம் இல்லை; அதனால் எளிதாக நான் வென்றுவிடுவேன் என்று ஜனநாயகத்துக்குப் புறம்பான வாதத்தை தம்பிதுரை வைத்தார்.

அந்த வருத்தம் எனக்கு இன்னமும் இருக்கிறது. ஆனால் மக்களுக்குப் பணம் முக்கியம் இல்லை. மக்களோடு நெருக்கமாக இருப்பவர்கள்; மக்களுக்காக போராடுபவர்கள்; மக்கள் மத்தியில் பணியாற்றுபவர்கள் தேவை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இது தம்பிதுரைக்கு மட்டுமே சொல்லப்பட்ட செய்தி அல்ல. பணபலத்தை மட்டுமே, அதிகார பலத்தை மட்டுமே நம்பி மக்களைப் புறக்கணித்து தேர்தலில் நிற்கும் அனைவருக்கும் சொல்லப்பட்ட செய்தி” என்றார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0