ஒரு சொல் கேளீரோ! – 32: அரவிந்தன்
பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய பல கூறுகளைக் கடந்த மூன்று பத்திகளில் பார்த்தோம். இதுபோன்ற பட்டியல்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவை பொதுவாக வழிகாட்டுபவையாகத்தாம் அமைய முடியும். எல்லா விதமான சூழல்களையும் சவால்களையும் அவற்றுக்கான முழுமையான பட்டியலையும் யாராலும் தர முடியாது. காரணம், மொழி என்பது கடல் போன்றது. இதுபோன்ற நடைக் கையேடுகளில் சில தவறுகளையும் சரிகளையும் சுட்டிக்காட்டிச் சில அடிப்படைகளைப் புரியவைக்க முயற்சி செய்யலாம்.
இதுவரை பார்த்த விதிகள், மரபுகள், முறைமைகளின் அடிப்படைக் கூறுகளைச் சுருக்கமாக இங்கே நினைவுகூரலாம்.
தமிழில் மெய்யெழுத்தில் சொல் தொடங்காது. எனவே ப், க், ட் ஆகிய மெய்யெழுத்துகளில் தொடங்கும் சொற்களைத் தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப பி, பு, கு, சி, டு என்னும் எழுத்துகளைப் பயன்படுத்தி எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்:
1. பிரகாசம், பிரிட்டிஷ், பிராவோ, கிறிஸ்து, பிரம்மம், குரோதம், கிராஸ்…
ப்ரியா, ப்ரகாஷ, த்ருவ், ப்ரீத்தி, க்றிஸ்டி ஆகிய பெயர்களைக் கொண்டவர்கள் தங்கள் பெயர்களை இப்படியேதான் எழுத வேண்டும் என்று சொன்னாலொழிய நாம் ‘ப்’, ‘க்’, ‘த்’ ஆகிய எழுத்துகளில் ஒரு சொல்லைத் தொடங்க வேண்டாம்.
2. இடையில் வரும் எழுத்துகளில் உள்ள சில சேர்க்கைகளும் தமிழ் ஒலிப் பண்புக்கு அன்னியமாக இருக்கும்.
தமிழில் கங சஞ டண தந பம றன ஆகிய எழுத்துகள் ஒன்றாகச் சேரும். எடுத்துக்காட்டுகள்:
தங்கம், மஞ்சள், கட்டணம், தந்தம், கலம்பகம், சென்றன…..
அதேபோல, ஒரே எழுத்து இரட்டிக்கும்: ச், ட், த், ப், க், ஹ், ம்…..
எடுத்துக்காட்டுகள்:
பச்சை, பட்டை, அத்தை, சப்பை, பக்கம், பற்றி, அம்மை…..
கங சஞ போன்ற இணைகள் பிறக்கும் இடம் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். மங்சள், கண்கு என்று தமிழில் வரவே வராது. கங சஞ போன்ற இணைகள் சேர்ந்தே வரும். இயல்பான இந்த இணைகள் உச்சரிப்புக்கு மிகவும் எளிதானவை.
பிற மொழிகளில் இவற்றினின்றும் மாறுபட்ட எழுத்துகள் ஒன்றாகச் சேரும்.
ப்ரச்ன, அஸ்த்ர, சாஸ்த்ர, க்றிஸ்டி, க்ரோ, ப்ரிஸ்டல், பாத்ர, சித்ர….
ச்ன, த்ர, க்றி ஆகிய ஒலிகள் தமிழுக்கு அன்னியமானவை. எனவே அவற்றைச் சற்றே உருமாற்றிப் பயன்படுத்துவது தமிழ் மரபு.
எடுத்துக்காட்டுகள்:
சித்ர – சித்திரம், பாத்ர – பாத்திரம், சாஸ்த்ர – சாஸ்திரம் / சாத்திரம், சூர்ய – சூரியன், வீர்ய – வீரியம், கார்ய – காரியம்…
இவற்றை எழுதுவதுபோலத்தான் பிரச்ன என்பதை பிரச்சினை என எழுத வேண்டும். ஆச்சர்ய என்பதை ஆச்சரியம் என எழுத வேண்டும்.
இதே விதியின்படி அத்ரஷ்ட என்பதை அதிருஷ்டம் என எழுத வேண்டும். ஆனால், அதிர்ஷ்டம் என்னும் வடிவம் நிலைபெற்றுவிட்டதால் அதை மாற்ற வேண்டாம் என்னும் பார்வை இருக்கிறது. எனவே அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என எழுதலாம்.
தமிழ் ஊடகங்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டு வரலாறு கொண்டவை. பாரதியின் காலத்திலிருந்து இன்றுவரை ஊடக மொழியில் பல விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஊடக மொழி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. சில ஊடகங்கள் இவற்றைக் கவனமாக உள்வாங்கிச் செயல்படுகின்றன. பல ஊடகங்கள் அப்படிச் செய்வதில்லை. பழைய இதழ்களின் பக்கங்களை அவ்வப்போது படித்துவந்தால் அது பல விதங்களிலும் பயனுள்ளதாக இருக்கும்.
[ஆங்கிலச் சொற்களை எழுதுவது எப்படி?](https://minnambalam.com/k/2019/07/15/8?fbclid=IwAR2pvOI3EPMFumVDafI6KJkOaOk3x85Vh9leux5A2xA0_5suawZbWhYesmA)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”