தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் ராஜினாமா ரத்து : உயர்நீதிமன்றம்!

public

தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் கே.செந்தில் ராஜினாமா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக மருத்துவ கவுன்சில் தலைவராக மருத்துவர் கே.செந்தில் உள்ளார். இவர் தவறு செய்த சில மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து அவர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், அவருக்கும் மருத்துவ கவுன்சில் உறுப்பினர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏர்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தனது ராஜினாமா கடிதத்தை உறுப்பினர் ஒருவரிடம் அளித்துள்ளார். அதன்பின்னர், அதனை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தேதியிடப்படாத ராஜினாமா கடிதத்தின் மூலம், அவரை பதிவியில் இருந்து நீக்கி, துணைத் தலைவராக இருந்து வரும் ஜெயலாலை தலைவர் பொறுப்பை கவனிக்கச் செய்யும் வகையில் மருத்துவ கவுன்சில் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் கே.செந்தில் மனுதாக்கல் செய்தார். அதில், செயற்குழு கூடும் முன்பே ராஜினாமா கடிதத்தை நான் திரும்ப பெற்று விட்டேன். எனவே, என் ராஜினாமா கடிதத்தை ஏற்று பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி விமலா முன்பு வந்தது. அப்போது நீதிபதி, “ செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை, மருத்துவர் கே. செந்திலின் பதவியை பறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *