~தமிழ்நாடு பிச்சை பாத்திரமா? அட்சயப் பாத்திரமா?

Published On:

| By Balaji

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் நேற்று திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 16) போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறையில் கடன் என்பது திமுக, அதிமுக என இரண்டு ஆட்சி காலத்திலும் இருந்ததாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, “தமிழகத்தைப் பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி. அட்சயப் பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா” என்று கூற, அதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

திமுக கொறடா அர.சக்கரபாணி எழுந்து, “மறைந்த தலைவர்கள் குறித்து அவையில் மரியாதை இல்லாமல் பேசக் கூடாது” என்று தெரிவிக்க, “திமுகவில் பாதபூஜை செய்து பதவி வாங்கிய செந்தில் பாலாஜி உதிர்த்த முத்துகளையே அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்” என்று அவருக்குப் பதிலளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும், அவைக்குறிப்பில் உள்ளதைதான் அமைச்சர் பேசினார் என்று சபாநாயகர் தனபால் குறிப்பிட்டார். இதனையடுத்து அமைச்சர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இருந்தபோது திமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜிதான் தற்போது திமுகவுக்கு வந்திருக்கிறார். அதனால் திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேரவையில் செந்தில் பாலாஜி பேசியதை அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்” என விளக்கம் அளித்தார். திமுக உறுப்பினர்களின் அமளி சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share