�
துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரக்ஷன் நடிக்கிறார். துல்கர் சல்மானின் 25ஆவது படமாக உருவாகிவரும் இதை FTS ஃபிலிம்ஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இதையடுத்து துல்கர் அடுத்ததாகப் புதுமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பயணம் சம்பந்தப்பட்ட இந்தக் கதையில் நடிக்க நான்கு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் நால்வரில் ஒருவராக தற்போது நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
துல்கருக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் மற்றும் ஷாலினி பாண்டேவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, தீனதயாள் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.
நிவேதா பெத்துராஜ் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் போலீஸாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’ படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
�,