^தமிழக மாணவர்களை விழுங்கும் ஹிந்தி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் ஹிந்தி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மூன்று மொழிகள் இடம்பெற்றிருக்கும் வகையில் வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் ஹிந்தி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி மொழி மாணவர்களிடையே திணிக்கப்படுவதாகத் தெரிகிறது. 1918ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தக்‌ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா வழியாக ஹிந்தி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2009-10ஆம் ஆண்டிலிலிருந்தே அதிகரித்து வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் 98 பள்ளிகளில் மட்டுமே ஹிந்தி பயிலும் வசதி இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 950க்கு மேல் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் தக்‌ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா நடத்தும் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திலிருந்து 5.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 80 சதவிகிதத்தினர் பள்ளி மாணவர்கள் ஆவர். இதில் தமிழகத்தைத் தவிர வேறு எந்த தென் மாநிலத்திலும் இவ்வளவு பெரிய வளர்ச்சி ஏற்படவில்லை.

சென்னையைப் பொறுத்தவரையில், ஹிந்தி பாடத் திட்டம் கொண்ட பள்ளி மாணவர்கள் இதுபோன்ற தேர்வுகள் வாயிலாக ஹிந்தி பயில அதிகம் விளைவதாக தக்‌ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் பொதுச் செயலாளரான ஜெயராஜ் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இத்தேர்வுகளுக்கான முதல்கட்ட தேர்வில் (பரிச்சயா) பிப்ரவரி மாதத்தில் மட்டும் 30,000 பேருக்கு மேல் பங்கேற்றுள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share