தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 5) கூடிய நிலையில், புதிய பெட்ரோலிய மண்டலங்கள் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எண்ணூர், ஆசனூர், தருமபுரி, நெல்லை மற்றும் சென்னை அருகே வல்லூர் ஆகிய இடங்கள் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் உள்ள நிலையில், புதிதாக ஐந்து மண்டலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் அனுமதி பெற வேண்டும்.�,”