தமிழகம்: நிறைவடைந்தது நான்கு தொகுதி இடைத்தேர்தல்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் காலியாக இருந்த 4 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சுமுகமாக முடிந்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்ட மன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுடன் இணைந்து நடந்த நிலையில், எஞ்சியிருந்த 4 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும், 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு தேர்தலும் இன்று நடைபெற்றது. சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேரும் என 4 தொகுதிகளிலும் 137 பேர் போட்டியிட்டனர்.

4 தொகுதிகளிலும் பதிவான முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்னும் வெளியிடவில்லை. 6 மணிக்குப் பின்னரும் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருந்ததால் முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 3 மணி நிலவரப்படி இந்த 4 தொகுதிகளிலும் 51.95 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

**தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரம் (மாலை 3 மணி நிலவரம்- %)**

ஓட்டப்பிடாரம்- 52.17

சூலூர்- 58.16

திருப்பரங்குன்றம்- 56.25

அரவக்குறிச்சி- 66.38

4 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருவதாக தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நத்தமேடு வாக்குச்சாவடியில் 3 மணி நிலவரப்படி 84.47 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தில் 52.95 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால் குழப்பத்தை தவிர்க்க இன்றைய இடைத்தேர்தலிலும், மறுவாக்குப்பதிவு மையங்களிலும் நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

அரவக்குறிச்சியில் அகர வரிசைப்படி வாக்காளர்கள் பெயர்கள் இல்லை எனக்கூறி அமமுகவினர் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தளவாபாளையம் பகுதியில் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் பந்தல் அமைத்து உட்கார காவல் துறை அனுமதி மறுப்பதாக திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அங்கு ஆய்வுக்கு வந்த திருச்சி சரக டிஐஜியிடம் முறையிட்டார். வாக்களிக்க வாக்காளர்கள் பேருந்தில் அழைத்து வரப்படுவதாகவும், திமுகவினர் பணம் வழங்க டோக்கன் கொடுப்பதாகவும் அங்கு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share