வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஆன்லைன் வர்த்தகத் தளம் அமைக்க ரூ.98 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு கூறியுள்ளது.
சுமார் 10 மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைச் சந்தைகள் மற்றும் ஐந்து மாவட்டங்களில் உள்ள வேளாண் உற்பத்தி மற்றும் கூட்டுறவு விற்பனைச் சந்தைகளை இணைத்து ஆன்லைன் வர்த்தகத் தளத்தை உருவாக்கும் பணியில் மாநில வேளாண் துறை சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் தொழில் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை மாநில அரசும் ஏப்ரல் 20ஆம் தேதி ஒப்புக்கொண்டுள்ளது. இதில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 8 கோடி வேளாண் உற்பத்திக் கூட்டுறவுச் சந்தைகளை ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் இணைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான மொத்த நிதியில் 90 சதவிகிதம் வரை தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) வழங்குகிறது. இதில் ரூ.56.45 கோடி ஒழுங்குமுறைச் சந்தைக்கும், ரூ.32 கோடி வேளாண் உற்பத்திக் கூட்டுறவுச் சந்தைக்கும் வழங்கப்படவுள்ளது. எஞ்சிய பத்து சதவிகித தொகையை மாநில அரசும், ஒழுங்குமுறை விற்பனைச் சந்தைகளும், வேளாண் உற்பத்திக் கூட்டுறவுச் சந்தைகளும் பகிர்ந்துகொள்கின்றன.
விழுப்புரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கடலூர், திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறைச் சந்தைகளும், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள வேளாண் உற்பத்தி மற்றும் கூட்டுறவுச் சந்தைகளும் இதில் இணைக்கப்படுகின்றன.�,