2018ஆம் ஆண்டில் தமிழகத்தில் கடல் மீன் உற்பத்தி 7.17 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடற்கரை ஒட்டிய 13 மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 363 மீன்பிடித் தலங்களில் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 10 முதல் 12 சதவிகிதம் வரையில் இருக்கிறது. அதேபோல, 72,000 டன்னுக்கு மேலான மீன்கள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான மீன் உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டில் தமிழகத்தின் மீன் உற்பத்தி 7.02 லட்சம் டன்னாக இருந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் பிடிக்கப்பட்ட 6.55 லட்சம் டன் அளவு மீன்களைவிட 7.17 சதவிகிதம் அதிகமாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மீன்கள் உற்பத்தியைப் பொறுத்தவரையில், 2018ஆம் ஆண்டில் மொத்தம் 34.9 லட்சம் டன் அளவிலான மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது 2017ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மீன்களின் அளவை விட 3.47 லட்சம் டன் குறைவாகும். மேற்குவங்கம், கர்நாடகம், மகாராஷ்டிராவில் குறைவான அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த மீன்கள் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் 2.01 லட்சம் டன்னும், கர்நாடகத்தில் 95,000 டன்னும், மகாராஷ்டிராவில் 86,000 டன்னும் மீன் உற்பத்தி குறைந்துள்ளது. புயல் சின்னம் காரணமாக மீன்பிடி நாட்களின் எண்ணிக்கை குறைந்ததால் மீன் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்தி மீன்கள் உற்பத்தியில் அதிகபட்சமாக 54 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமாகப் பிடிக்கப்பட்ட மீன்களுக்கான பட்டியலில் முதல் இடத்திலிருந்த மத்தி மீன் ஒன்பதாவது இடத்துக்குச் சென்றுள்ளது. 2017ஆம் ஆண்டில் மொத்தம் 3.37 லட்சம் டன் அளவுக்கு மத்தி மீன்கள் பிடிக்கப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டில் இதன் அளவு 1.55 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. மீன் பிடித்தலில் ஈடுபடும் ஒன்பது இந்திய மாநிலங்களில் குஜராத் முதலிடம் வகிக்கிறது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 7.80 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 7.02 லட்சம் டன் மீன்களும், கேரளாவில் 6.43 லட்சம் டன் மீன்களும் பிடிக்கப்பட்டுள்ளன.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
�,”