தனுஸ்ரீ விவகாரம்: விழித்துக்கொண்ட நடிகர்கள் சங்கம்!

public

தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நானா படேகர்.

தனுஸ்ரீ தத்தா கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சினிமா, தொலைக்காட்சி நடிகர்கள் சங்கம் (CINTAA) நானா படேகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சங்கத்தினர், ‘இந்த விவகாரம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர். தற்போது நானா படேகர் நடிகர்கள் சங்கத்தின் நோட்டிஸுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் அடிப்படையில் CINTAA அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக நானா படேகர் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றதாகவும் தவறானதாகவும் இருப்பதாக கூறியுள்ளார். தனுஸ்ரீக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது நானா படேகர் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் தனு ஸ்ரீ. அப்போதே சினிமா, தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்தில் (CINTAA) நானா படேகருக்கு எதிராக புகார் அளித்திருந்தார். ஆனால் நடிகர்கள் சங்கம் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மூ டூ மூவ்மெண்ட் மூலம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றி பேசிவரும் நிலையில் நடிகர்கள் சங்கம் பத்தாண்டுகளுக்கு பின் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *