`தனிமைப்படுதலும் தனித்து நிற்பதும்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி!

ஆதிகாலத்திலிருந்து தொடரும் மது, புகை என்பதில் ஆரம்பித்து, நம்மை விட்டு நீங்காமல் பற்றிக்கொண்டிருக்கும் எல்லாப் பழக்கவழக்கங்களும் இப்போதைய வேகயுகத்தில் போதை வகையறாதான். போதையைச் சூட்டிக்கொண்டு தங்களையும் சிதைத்துக்கொண்டு, மற்றவர்களையும் துடிதுடிக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஏழை, பணக்காரன் என்று தொடங்கி எந்த பேதமும் இதனுள் அடங்காது.

ஆனால், இத்தகைய போதை வழக்கங்களால் புதிதாய் நட்புறவுகள் உண்டாகும் என்பதை உங்களால் ஏற்க முடியுமா? புதிதாக ஓரிடத்தில் பணிக்குச் சேரும்போது சிகரெட் புகைப்பவர்களோ, மது அருந்துபவர்களோ எளிதாக நட்பாகிவிடுவர். டீடோட்டலராக இருப்பவருக்குக் கடைசி வரை அந்த பாக்கியம் கைவராது. பள்ளி, கல்லூரி நண்பர்களைப் போன்று பழகும் வாய்ப்பை மது, சிகரெட் இரண்டும் பெற்றுத் தரும்.

மது என்பது பணி நேரம் முடிந்த பிறகு ஒன்றிணைந்து அரட்டையடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவது. சிகரெட் என்பது தினம் பலமுறை டீக்கடை அல்லது பெட்டிக்கடைகளைச் சுற்றிவரும் வாய்ப்பைத் தரவல்லது. ஊடக உலகம் சார்ந்து இயங்குபவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய அனுபவம் இருக்கும்.

எதிரும் புதிருமாக அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்கூட, அந்த உலகத்துக்குள் நுழைந்துவிட்டால் ஒரே தீக்குச்சியினால் சிகரெட்டில் ஜோதி ஏற்றுவர். இம்மாதிரியான சூழல்களில் யாரேனும் ஒருவர் அக்கூட்டத்தின் கைப்பிள்ளையாக இருந்துவிட்டால் போதும். சில பல நகைச்சுவைத் துணுக்குகளும் பொறுக்கி எடுக்கும் அளவுக்குப் புன்சிரிப்புகளும் தேறிவிடும். இது போன்ற போதைகளை மனம் நாட, அதற்கு உகந்த சூழல் நிலவுவதும் ஒரு காரணம்.

இவ்வாறு சொல்வதனால், இது போன்ற போதைகளை நாடுவது நல்லது என்று அர்த்தமல்ல. இதுபோன்ற பழக்கங்கள் இல்லாதவர்கள் கூட்டத்தில் தனியராய் உணர்வது இயல்புதான்.

புகை, மதுபோன்ற எந்தப் பழக்கத்தையும் கைக்கொள்ளாமலேயே இவ்வாறு உணர்வதைத் தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் சிறப்பம்சங்களை வெளிப்படுத்துவதே அது. அலுவலக விழாவில் பாடியோ, ஆடியோ அசத்திவிடும் திறமையுள்ளதா? எவ்வளவு டிராஃபிக்கிலும் பைக்கை ஸ்மூத்தாக ஓட்டத் தெரியுமா? புராஜக்ட் முடியும் தறுவாயில் ஏற்படும் கலங்கலான எண்ணவோட்டத்தை மீறி மிஸ்டர் கூலாக இருப்பீர்களா? இது போன்று சிறப்பம்சங்கள் பல உங்களுக்குள் ஒளிந்திருக்கும். அவற்றைத் தூசி தட்டிச் செயல்படுத்தினால் போதும். போதை ஆசாமிகளின் நட்பு வட்டம் நீர்த்துப்போய், உங்களிலிருந்து பெருகும் வலைப்பின்னல் இறுக்கமாகும்.

பல நேரங்களில் நட்புறவுகளை விதைக்கத் தனி ஒருவனாக இருப்பதும் அவசியம்தான். இதைப் புரிந்து தேர்ந்துகொண்டால் எந்த இடத்திலிருந்தாலும் உங்களைச் சுற்றி ஒரு கும்பல் இருக்கும்.

அது உங்களால் சேர்ந்த கூட்டமாக இருக்கும்!

**- பா.உதய்**

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)

**

.

**

[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/72)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share