தண்ணீர் பஞ்சமில்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் : சத்குரு

Published On:

| By Balaji

தண்ணீர் பஞ்சமில்லாத பாரதத்தை உருவாக்க சுதந்திர தினத்தில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 73ஆவது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஈஷா தன்னார்வலர்கள், சம்ஸ்கிருதி மாணவர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள், பழங்குடியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் திரு.கிட்டுசாமி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார். பின்னர், சத்குருவின் சுதந்திர தினச் செய்தி வாசிக்கப்பட்டது. அந்த செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது:

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள். இந்தியா சுதந்திரம் பெற்ற இந்த 72 ஆண்டுகளில், பொருளாதாரம், வியாபாரம், அறிவியல், தொழில்நுட்பம், தேசத்தின் இறையாண்மையை நிறுவுதல் என பல மகத்தான முன்னேற்றங்களை இந்த நாடு கண்டிருக்கிறது.

இவை அனைத்தும் செய்தாயிற்று. ஆனால், முன்னேற்றத்திற்கான நமது பசியில், நமது மக்கள்தொகைக்கு ஏற்றவாறு சாத்தியக்கூறுகளை நிறைவேற்றுவது என்பது சற்றே சவாலானதுதான். நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் – நாம் 1947-ல் சுதந்திரம் பெற்றபோது, அன்றைய இந்தியனின் வாழ்நாள் 28 ஆண்டுகாலமாக இருந்தது, ஆனால், இன்றோ அது கிட்டதட்ட எழுபது ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்டதாக அதிகரித்திருக்கிறது. இந்த தேசம் நீண்டதூரம் பயணப்பட்டிருக்கிறது. இந்த எல்லா முயற்சிகளிலும், ஒரு விஷயம் அதிகப்படியான அடி வாங்கியிருக்கிறது – அது நமது மண்ணும் நீரும்தான். தண்ணீர் பஞ்சமில்லா சுதந்திர பாரதத்தை நாம் உருவாக்கவேண்டும்.

இதுவே நமது உறுதிமொழியாக இருக்கவேண்டும் – நம்மையும் மீறி இங்கு வாழப்போகும் அடுத்தடுத்த தலைமுறைகள் இங்கு நலமாய் வாழ்வதை நாம் உறுதிசெய்து கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு உறுதி இது. தண்ணீர் பஞ்சமில்லா சுதந்திர பாரதத்தை நாம் உருவாக்கி வருங்கால சந்ததியினர் இந்த தேசத்தில் அற்புதமாய் வாழ்வதை நாம் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு நிறைவான தண்ணீரும் வளமான மண்ணும் விட்டுச்செல்லாவிட்டால், நம் எழுபதாண்டு கால அரசியல் சுதந்திரம் வீணாகிவிடும். இந்தியாவின் 73வது சுதந்திர தினம், தண்ணீர் பிரச்சனையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான தினம். இதனை நாம் நிகழச்செய்வோம்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார். சுதந்திர தின விழாவில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு.குமார், இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் திரு.வேலுமணி, முன்னாள் துணைத் தலைவர் திரு.வெள்ளியங்கிரி, முன்னாள் கவுன்சிலர்கள் திரு.பொன்னுசாமி, திரு.பழனிசாமி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் திரு.கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

**

மேலும் படிக்க

**

**[முப்படைகளின் தலைமை அதிகாரி! அத்வானி கனவை நனவாக்கிய மோடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/15/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- கோபப்பட்ட பன்னீர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/14/75)**

**[2020 ஏப்ரல் ரஜினியின் தனிக்கட்சி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/15/17)**

**[நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/14/18)**

**[எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/14/5)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share